குறள் என்றாலே நமக்கெல்லாம் திருக்குறள் தான்.
சிறிய ,இரண்டு அடிக்குள் உள்ள பாடல்வகையை குறள் என்று அழைத்திருக்கிறார்கள்.
திருமுறையில் உள்ள பலவகையான செய்யுள் வகைகளில் திருவிருக்குக்குறளும் ஒன்று.
இந்தப்பதிகம்,காஞ்சி திருவிருக்குக்குறள் மூன்றாம் திருமுறையில் இருக்கிறது.
கருவார்கச்சித் , திருவேகம்பத்
தொருவாவென்ன , மருவாவினையே
(கருவார் கச்சி திருஏகம்பத்து ஒருவா என்ன மருவா வினையே)
ஏகாம்பரம் என்ற பெயர் பரவலாக தமிழ் மக்களிடையே இருக்கிறது.
ஏகம் என்றால் ஒன்று. ஆம்பரம் என்றால் மாமரம். ஒற்றை மாமரத்தின் கீழே உமை அம்மை கையால் பிடித்த மண்ணால் ஆன திருமேனி கொண்டவர் ஏகாம்பரேஸ்வரர். இந்தத்தலம் பஞ்சபூதங்களில் பூமிக்கான தலமாகும்.
ஆதி பகவான் முதற்றே உலகு என்கிறது வள்ளுவரின் குறள். கருவாக -எல்லாவற்றுக்கும் கருப்பொருளாக இருப்பவர் கச்சி ஏகாம்பரேஸ்வரர். அவரை வணங்க நம்மை வந்து தீயவினைகள் சேராது.
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"
நல்வினை தீவினை இரண்டுமே மீண்டும் பிறப்பைத்தரும். திருவள்ளுவர், இறைவனின் பெருமையை, புகழை மட்டுமே விரும்புகிறவர்களுக்கு, இந்த இருவினைகளும் அண்டாது என்கிறார்.
அதே போல சம்பந்தப்பெருமானும் ,
படமார்கச்சி , இடமேகம்பத்
துடையாயென்ன , அடையாவினையே.என்கிறார் .
படமார்கச்சி= சித்திரவேலைப்பாடுகள் கொண்ட, (படம்-கொடி), கொடிகள் அசைந்து ஆடும் மாடங்களைக்கொண்ட காஞ்சிபுரத்தைத்தன் இடமாகக்கொண்ட ஏகாம்பரேஸ்வரரை, எங்கள் தலைவன் என்று கொண்டு, அவரை போற்ற, வினைகள் வந்து சேராது.
"விநாயகனே வினைதீர்ப்பவனே"; வேலுண்டு வினையில்லை" போன்ற பாடல்களை அடுத்த முறைகேட்டால், வினைப்பற்றிய இந்தப்பதிகமும் நிச்சயம் நினைவில் இருக்கும்.
மனம், வாக்கு, செயல் என்ற மூன்றிலும் எந்த வினை செய்கிறேனோ, அவை அனைத்தும் இறைவனுக்கு நான் பிரசாதமாகப்படைப்பவை என்ற எண்ணம் தோன்றிவிட்டால், கெட்ட எண்ணங்களோ, சொல்லோ, செயலோ எங்கிருந்து உருவாகும்?
செப்டம்பர் 11 மஹாகவி பாரதியாரின் நினைவுநாள்.
எந்தமொழியில் எழுதி இருந்தாலும், துக்காராம், தியாகராஜர், பாரதியார் என எல்லாரும் சொல்வது ஒன்று தான்! மனதை வெளுக்க கடவுளின் பெயரைத்தவிர வேறு வழி இல்லை.
துணி வெளுக்க மண்ணுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல் வெளுக்க சாம்பலுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மணி வெளுக்க சாணையுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம் வெளுக்க வழியில்லை—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
முழுபதிகமும் கீழே:
காஞ்சி திருவிருக்குக்குறள்:
கருவார் கச்சித், திருவே கம்பத்
தொருவா வென்ன, மருவா வினையே. 1
மதியார் கச்சி, நதியே கம்பம்
விதியா லேத்தப், பதியா வாரே. 2
கலியார் கச்சி, மலியே கம்பம்
பலியாற் போற்ற, நலியா வினையே. 3
வரமார் கச்சிப், புரமே கம்பம்
பரவா ஏத்த, விரவா வினையே. 4
படமார் கச்சி, இடமே கம்பத்
துடையா யென்ன, அடையா வினையே. 5
நலமார் கச்சி, நிலவே கம்பம்
குலவா வேத்தக், கலவா வினையே. 6
கரியின் னுரியன், திருவே கம்பன்
பெரிய புரமூன், றெரிசெய் தானே. 7
இலங்கை யரசைத், துலங்க வூன்றும்
நலங்கொள் கம்பன், இலங்கு சரணே. 8
மறையோன் அரியும், அறியா வனலன்
நெறியே கம்பம், குறியால் தொழுமே. 9
பறியாத் தேரர், நெறியில் கச்சிச்
செறிகொள் கம்பம், குறுகு வோமே. 10
கொச்சை வேந்தன், கச்சிக் கம்பம்
மெச்சுஞ் சொல்லை, நச்சும் புகழே. 11
சிறிய ,இரண்டு அடிக்குள் உள்ள பாடல்வகையை குறள் என்று அழைத்திருக்கிறார்கள்.
திருமுறையில் உள்ள பலவகையான செய்யுள் வகைகளில் திருவிருக்குக்குறளும் ஒன்று.
திருக்குறள் தெரியும்;அது என்ன திரு+இருக்கு+குறள்?
ரிக் வேதத்தில் உள்ள மந்திரங்கள் ஒலிப்பண்புகள் கொண்டவை.அவற்றை சரியாக சொல்வதன் மூலம், மனஒருமையும், மற்ற நலன்களும் அமையப்பெறும்.
சரி, வடமொழி எனக்கு பழக்கமான மொழி அல்ல; அதை ஒரு சாரார் மட்டுமே எடுத்துக்கொண்டு விட்டார்கள் என்று சொல்பவர்களுக்கு, எல்லாருக்கும் தினமும் மனதில் மந்திரம் போல நிற்க, சிறிய அளவிலான சொற்களைக்கொண்டு, அதே நற்பலன்களைத்தரும் வகையில் திருஞானசம்பந்தர், பல திருவிருக்குக்குறள் பதிகங்களைப்பாடி உள்ளார்.
இந்தப்பதிவில் இருக்கும் திருவிருக்குக்குறள், காஞ்சி ஏகாம்பரேஸ்வரரைப்பற்றியது. பெரும்பாலான பாடல்கள் "வினை"என்ற சொல்லில் தான் முடிகிறது.
இதைப்போலவே சீர்காழி, திருவாரூர், மதுரை, திருவீழிமிழலை, திருவிடைமருதூர் போன்ற தலங்களுக்கும் திருவிருக்குறள்களைப்பாடியுள்ளார் திருஞானசம்பந்தர்.
மனம், சொல், செயல் என்ற மூன்றாலும் நாம் பிறருக்கு செய்யும் நன்மையையும் தீமைக்கும் நமக்கு புண்ணியபலன்களும் பாவங்களும் வந்து சேருகின்றன.
சில மதங்களில் ஏன் துன்பமான பிறவி இருக்கிறது என்பதற்கு பதிலே கிடையாது. சனாதன தர்மம் எனப்படும் இந்துமதத்தில் முழுமையான விடைகள் எல்லாவற்றுக்கும் இருக்கின்றன. விடைகள் அவரவர் தேடுகின்ற அளவிலேயே கிடைக்கின்றன.
என் தேவார ஆசிரியர், பெரும்பாண நம்பி திரு.கோடிலிங்கம் ஐயா சொல்லுவார், என்ன பாத்திரம் கொண்டு வருகிறாயோ, அந்த அளவில் தான் நிறைக்க முடியும் என்று.
ஏன் நமக்கு ஒரு கஷ்டம் வருகிறது என்று நம் மனம் ஆராயும்போது, பலநேரங்களில் நாம் பிறருக்கு ஏற்படுத்திய கஷ்டம் நினைவில் இருப்பதில்லை.
வினைகள் யாவும் நினைவில் நிற்பவை அல்ல. வாழ்க்கை அவர் அவர் வினை வழி தான்.
"தர்மம் தலைகாக்கும் ;தக்க சமயத்தில் உயிர்காக்கும் "என்ற திரைப்பாடலுக்கு தலையாட்டும் நம் மக்கள், ஏன் தர்மம் தலையைக்காக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும்!. நல்ல செயல்களின் பலனாகத்தான் நம் தலை காக்கப்படும்.
"நகரேஷு காஞ்சி" என்று ஒரு வாக்கியம் சொல்வார்கள். நகரங்களில் காஞ்சிபுரம் போன்ற சிறப்புடையது ஒன்றுமில்லை என்று. தமிழ் பேசும் மக்களின் கோயில்களில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் , காலத்தால், நாலாயிரம் வருடங்களுக்கு முன்பானது என்பதற்கான சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியங்களிலும் காஞ்சிபுரம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இந்தக்கோயிலை பெரிதாக நிர்மாணித்துக்கட்ட ஆதி சங்கரர் அரும்பங்கு ஆற்றி இருக்கிறார்.
முத்துசாமி தீக்ஷிதர், பட்டினத்தார் , சைவக்குரவர்கள் நால்வர் என்று பலரும் இந்தத்தலத்தைப்பாடி இருக்கிறார்கள்.
பக்தியின் வழி அறத்தைப்பற்றி நட என்று தான் சமய இலக்கியங்கள் சொல்கின்றன.
சந்தக்கவிகளில் அருணகிரிநாதரைப்போல, திருஞானசம்பந்தரைப்போல, இனி வரும் காலங்களில் யார் எழுதப்போகிறார்கள்?