வேண்டதக்கது அறியோய் நீ ! வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ! வேண்டி என்னைப் பணி கொண்டாய்!
வேண்டி நீ யாது அருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில், அதுவும் உந்தன் விருப்பன்றே!
திருவாசகம்-குழைத்த பத்தில், உள்ள இப்பாடல், உண்மையான பக்தியுடையோர், இறைவன், எதைத் தந்தாலும், அதை விருப்பத்தோடு, ஏற்றுக்கொள்ளும் தெளிவான மன நிலையைக்கொண்டிருப்பர் என்பதை தெளிவுபடுத்துகிறது
உண்மை பக்தி, இறைவன், சொல்லின்படி நடப்பது. இறைவன், நாம், வேண்டும்,எதையும், முழுதாய், தரும், கருணை வடிவானவர். ஆதலால், வேண்டத்தகாதவற்றை வேண்டினாலும், தருபவர். ஆனால், இறைவனிடத்தில், உண்மை அடியவர், இறைவன், தரும், எதையும், ஏற்றுக்கொள்வர்.
இறைவன், மாணிக்க வாசகருக்கும், மற்ற நாயன்மாருக்கும், துன்பம், தந்த போதும், அவர்கள், பக்தி நிலையில் இருந்து மாறவில்லை.
'இடரினும் தளரினும், எனதுறு நோய் தொடரினும், உனகழல், தொழுதெழுவேன்'- சம்பந்தரின் பதிகம், ஒப்பு நோக்கத் தக்கது.
9 comments:
நான் அனு தினமும் சிவனை தரிசனம் செய்யும் போது சொல்லும் பாடல் இது.
மிகவும் நன்றி.
விளக்கம் மிக்க அருமை.
தொடரட்டும் தங்கள் புனித பணி.
nice explanation
அருமை
Super
மிக அருமை
அருமை🙏🏻 எனக்கு தோன்றிய/தெரிந்த சிறு திருத்தங்கள், உங்கள் பார்வைக்கு
அறிவோய் நீ; அறியோய் அல்ல
அயன்மாற்கு அரியோய் ; அறியோய் அல்ல
அர்த்தம் சிதையக்கூடாது என்பதால், சொல்லவேண்டும் என்று தோன்றிற்று; சுட்டிக்காட்டியமைக்கு மன்னிக்கவும் 🙏🏻🙏🏻
வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதும் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே
வேண்டத் தக்கது அறிவோய் நீ - உயிர்களுக்குத் தேவையானது இது என்று அறிவோன் நீயே; மேலும், வேண்ட - அவ்வுயிர்கள் எவற்றை வேண்டினாலும், முழுதும் தருவோய் நீ - அவையெல்லாவற்றையும் அருளுபவனும் நீயே; வேண்டும் அயன்மாற்கு - உன்னைக் காண விரும்பிய பிரமன் திருமால் என்பவருக்கும், அரியோய் நீ - அருமையாய் நின்றவனாகிய நீ; வேண்டி - நீயாகவே விரும்பி, என்னைப் பணி கொண்டாய் - என்னையாளாகக் கொண்டனை; நீ வேண்டி - என் பொருட்டு நீ விரும்பி, யாது அருள் செய்தாய் - எதனை அருள் செய்தனையோ, அதுவே யானும் வேண்டின் அல்லால் - அதனையே யானும் விரும்புவதல்லது, வேண்டும் பரிசு ஒன்று - நானாக விரும்புகின்ற பொருள் ஒன்று, உண்டு என்னின் - உளதாகுமெனில், அதுவும் உன்றன் விருப்பு அன்றே - அந்தப் பொருளும் உன்னிடத்தில் நான் வைக்கின்ற அன்பேயன்றோ?
உயிர்களுக்குத் தேவையானது எது என்று உணர் பவன் இறைவனாதலின், அவை அவன்பால் ஒன்றையும் வேண்ட வேண்டுவது இல்லை என்பார், 'வேண்டத் தக்கதறிவோய் நீ' என்றும், அவ்வாறு இருப்பினும் உயிர்கள் தம் அறியாமையால் பலவற்றை வேண்ட அவற்றைக் குறைவற அளித்து வருகிறான் என்பார், 'வேண்ட முழுதும் தருவோய் நீ' என்றும் உனது திருவுள்ளக் குறிப்பின்படி நடப்பதே அடியவர் கடமை என்பார், 'நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்' என்றும், இத்தகைய நிலையில் அடியவர்கள் தங்கள் பெருவிருப்பால் தாங்களாக இறைவன்பால் வேண்டிக்கொள்வது அவனிடத்தில் உண்டாக வேண்டிய அன்பே என்பார், 'வேண்டு பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே?' என்றும் கூறினார்.
இதனால், இறைவன் அடியார்களது அன்பின் நிலை கூறப்பட்டது.
நன்றி நன்றி நன்றி
அன்பே சிவம்
Post a Comment