இன்றைய நவீன கவிதைகளை ஒரு முறைக்கு மேல் படித்தால் தான் ஒரு பொருள் விளங்குகிறது. நல்ல நவீன கவிதைகள் நம்மில் ஒரு சிந்தனையையும் தோற்றுவிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
இது எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தரின்
சித்திரக்கவி வகைகளில் ஒரு வகையான மாலை மாற்று பதிகம்.
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
இது தமிழா என்று புருவம் உயர்த்துபவர்களும் இருக்கலாம்!!.இரு வழி யொக்கும் (Palindrome) சொற்கள்/ சொற்றொடர்களுக்கு உதாரணமாக விகடகவி ,தேரு வருதே ,என்பவற்றை சொல்லலாம். இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் ஒரே மாதிரி இருக்கும் அமைப்பு.
ஆங்கில உதாரணங்கள் : Malayalam, Madam, civic முதலியன.
இப்படி சொற்களாக, சொற்றொடர்களாக, வாக்கியங்களாக நிறைய இருக்கின்றன.
இப்படி நம்மால் கவிதை எழுத முயற்சிக்க முடியுமா? திருப்பி போட்டு வாசித்தாலும் பொருள் இருக்கணும்!!!.
முதல் பாடலின் பொருள் :
யாமாமா= யாம் கடவுள்களா?
நீ ஆம் ஆம்!= நீ மட்டும் தான் கடவுள்
மா யாழீ= பெரிய யாழை ஏந்தியவனே
காமா = எல்லாராலும் விரும்பப்படுபவனே
Do not Bring us to The Test என்று ஒரு கிறிஸ்தவர்கள் ஒரு பிரார்த்தனையை சொல்வார்கள்
மா மாயா = பெரிய மாயங்களைச்செய்பவனே
நீ மா மாயா= எங்களை பிற
சோதனைகளிலிருந்து, மாயைகளிலிருந்து காப்பாற்று இதுவே பிரார்த்தனை.!
ஒலி வடிவில் கேட்க:
இலக்கணத்திலும் தமிழ் சொல்வன்மையிலும் சிறந்தவர்களால் மட்டுமே பாடக்கூடிய ஒரு வகை சித்திரக்கவி.இந்த மாலை மாற்று பதிகம் எனப்படும் பதிகம்.
முழு பதிகமும் இங்கே:
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.
நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.
வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.
இது எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தரின்
சித்திரக்கவி வகைகளில் ஒரு வகையான மாலை மாற்று பதிகம்.
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
இது தமிழா என்று புருவம் உயர்த்துபவர்களும் இருக்கலாம்!!.இரு வழி யொக்கும் (Palindrome) சொற்கள்/ சொற்றொடர்களுக்கு உதாரணமாக விகடகவி ,தேரு வருதே ,என்பவற்றை சொல்லலாம். இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் ஒரே மாதிரி இருக்கும் அமைப்பு.
ஆங்கில உதாரணங்கள் : Malayalam, Madam, civic முதலியன.
இப்படி சொற்களாக, சொற்றொடர்களாக, வாக்கியங்களாக நிறைய இருக்கின்றன.
இப்படி நம்மால் கவிதை எழுத முயற்சிக்க முடியுமா? திருப்பி போட்டு வாசித்தாலும் பொருள் இருக்கணும்!!!.
முதல் பாடலின் பொருள் :
யாமாமா= யாம் கடவுள்களா?
நீ ஆம் ஆம்!= நீ மட்டும் தான் கடவுள்
மா யாழீ= பெரிய யாழை ஏந்தியவனே
காமா = எல்லாராலும் விரும்பப்படுபவனே
காண்
நாகா= நாங்கள் பார்க்கும்படி நாகத்தைக் கழுத்தில் அணிந்தவனே.
நாகம் கூட அமைதியாய் இறைவனின் தோளில் இருக்கிறது.
காணா காமா = காமனை மன்மதனை எரித்து யாரும் பார்க்கமுடியாதபடி செய்தவனே
காழீயா= சீர்காழியில் எழுந்தருளும் இறைவனே.
Do not Bring us to The Test என்று ஒரு கிறிஸ்தவர்கள் ஒரு பிரார்த்தனையை சொல்வார்கள்
மா மாயா = பெரிய மாயங்களைச்செய்பவனே
நீ மா மாயா= எங்களை பிற
சோதனைகளிலிருந்து, மாயைகளிலிருந்து காப்பாற்று இதுவே பிரார்த்தனை.!
ஒலி வடிவில் கேட்க:
முழு பதிகமும் இங்கே:
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.
நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.
வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.
1 comment:
Very good initiative by you to bring the specialties of Tamil and the Thirumuraigal and other devotional poems.
Post a Comment