நெட்டி மாலை |
கருவூர்த்
தேவர் திருவிசைப்பா
கேடிலா மெய்ந்நூல் கெழுமியுஞ் செழுநீர்க்
கிடையனா ருடையஎன் னெஞ்சிற்
பாடிலா மணியே !மணியுமிழ்ந் தொளிரும்
பரமனே !பன்னகா பரணா !
மேடெலாஞ் செந்நெற் பசுங்கதிர் விளைந்து
மிகத்திகழ் முகத்தலை மூதூர்
நீடினா யெனினும் உள்புகுந் தடியேன்
நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே
ஒன்பதாம் திருமுறையில் உள்ள பாடல் இது. உவமை அழகுக்காக இங்கே பதிவிடுகிறேன்.
புதிய புதிய உவமைகளாய் திருமுறை முழுதும் இருக்கின்றன.மாட்டுபொங்கலுக்கு மாடுகளுக்கு நெட்டி மாலை செய்வார்கள். (பார்க்க: உள்படம்)
கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் - கேடு
இல்லாத மெய் அறிவை போதிக்கும் புத்தகங்களோடு பழகியும்.
புத்தகங்களைப்படித்தும் என்று சொல்லவில்லை. (பழகியும் என்பது பல
முறை வாசிப்பதால் சொல்லப்பட்டது என்று எனக்கு தோன்றுகிறது.)
செழுநீர்கிடை அன்னார் உடைய என் நெஞ்சிற் -நல்ல நீருக்கு இடையில் இருக்கும் நெட்டி, எப்படி தண்ணீரை உறிஞ்சாதோ, அப்படி இருக்கிறது என் மனது. இறைஉணர்வைத்தூண்டும் நூல்களை படித்தும் என் மனது கரையவில்லை.
பாடிலா மணியே-அழிவு இல்லாத மணியே
மணி உமிழ்ந்து ஒளிரும் பரமனே -நல்மணிகள் உமிழும் ஒளியில் ஒளிர்கிற பரம்பொருளே.
பன்னகா பரணா-நாகரத்தினத்தை உமிழும் பாம்பினை ஆபரணமாக அணிந்தவனே
மேடெலாஞ் செந்நெற் பசுங்கதிர் விளைந்து
மிகத்திகழ் முகத்தலை மூதூர்-மேட்டுநிலங்கழிக்கும்
நீர் பாயும் அளவுக்கு நீர்வளம் இருப்பதால், மேடுகளில் கூட செந்நெல் விளையும்,
திருமுகத்தலை என்னும் செழிப்பான ஊரில்
நீடினா யெனினும் உள்புகுந் தடியேன்
நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே
-நீண்ட நாட்களாய் நீ கோயில் கொண்டு இருக்கிறாய் என்றாலும்,நெட்டி போல இருக்கும் என் நெஞ்சமெல்லாம் நிறைந்து இருக்கிறாயே. இது எனக்கு வியப்பைத்தருகிறது.
4 comments:
அருமை
Just now I read this.My friend Soundram used to make netty malai in four different colours and sell it to Japan the milkman for pongal.We have used this netty to poison the rats and kill them.But it is not so in case of thermocal. to be contd.
Netti is used to poison rats? How is it used? Then why we keep it on cow? Why we don’t use for temple Murthy? Is netti safe?
Netti is cut into pieces and might choke rats is what I understand. It is like the packaging materials used for TV etc
Post a Comment